‘காக்க காக்க’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான நடிகர் ஜீவன், தொடர்ந்து ‘நான் அவனில்லை’, ‘யுனிவர்சிட்டி’, ‘திருட்டுப்பயலே’, ‘மச்சக்காரன்’, ‘அதிபர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக ‘பாம்பாட்டம்’ படத்தில் நடித்திருந்த அவர், தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் களமிறங்குகிறார். அசோக் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘லவ்வர் பாய்’ படத்தில் அர்ஜித் சங்கர், கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் நிலையில், இப்படத்தில் ஜீவன் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
Add a Comment
