ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி காலமானார்!

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயாரும், பின்னணி பாடகியுமான கிருஷ்ணா முகர்ஜி தனது 75வது வயதில் இன்று மதியம் காலமானார். பெங்காலி திரையுலகில் பணியாற்றிய இவர், ஃபில்மாலயா ஸ்டுடியோஸ் நிறுவனர்களில் ஒருவரான இயக்குநர் ராம் முகர்ஜியை திருமணம் செய்திருந்தார். ராம் முகர்ஜி கடந்த 2017ம் ஆண்டு காலமானார். ராணி முகர்ஜியின் திரைப்பயணத்தில் தனது தாயாரின் பங்கு முக்கியமானது என அவர் பல்வேறு நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply