சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்!

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் – கமலா கணேசன் தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நேற்று செப்டம்பர் 20ம் தேதி அதிகாலை காலமானார். ராம்குமார், பிரபு, தேன்மொழி ஆகியோர் அவரது உடன்பிறந்தவர்கள். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய ‘சாந்தி தியேட்டர்’ அவரது பெயரில் மவுண்ட் ரோட்டில் 1961ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் காமராஜர் ஜனவரி 12ம் தேதி இத்தியேட்டரை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply