அஜித் ரசிகர்கள் தொடங்கிய புதிய கட்சி – ‘தமிழக மக்கள் கழகம்’!

தமிழகத்தில் அஜித்தின் ரசிகர்கள் ஒன்றிணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். உளுந்தூர்பேட்டையில் கூடிய ரசிகர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அஜித் ரசிகர்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பை தொடங்கியதாக தெரிவித்துள்ளனர். மேலும், கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பதவியை அஜித்துக்காக காலியாக வைத்துள்ளதாகவும், அவர் அரசியலுக்கு வந்தால் கட்சியை அவரிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். அரசியல் மற்றும் ரசிகர் மன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்கும் அஜித், ரசிகர்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் கட்சி தொடங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply