மலையாளத்தில் ‘குஷ்பு’ என்ற பெயரில் புதிய ஹாரர் காமெடி திரைப்படம் உருவாகி வருகிறது. சுஜன் அரோமல் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு சமீபத்தில் வெளியிட்டார்.
இப்படத்தின் சிறப்பம்சமாக, கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது மீட்கப்பட்ட ‘சில்’ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியிருந்த இந்த நாய் மீட்புக் குழுவினரால் காப்பாற்றப்பட்டது. தற்போது அதே நாய் திரைப்படத்தில் நடித்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாகத் திரைப்படங்களில் நடிப்பதற்காகத் தனிப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இயற்கைப் பேரிடரின்போது மீட்கப்பட்ட நாய் ஒன்று தற்போது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
