தமிழில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘மைக்கேல்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
குடும்ப உறவுகளைச் சுற்றி நகரும் இந்தப் படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை ஆகியவற்றை இணைத்த ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது. அதேசமயம், கதையில் இடம்பெறும் வலுவான கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
அர்ஜுன் தாஸ், ப்ரீத்தி பகதாலா ஆகியோருடன் கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் மற்றும் POP Entertainment இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
