‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் புரோமோ வெளியீடு – துருவ் விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ படத்தில் கபடி வீரராக நடித்த துருவ் விக்ரம், தனது நடிப்பால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘ஜாக்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

தற்போது ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. துருவ் விக்ரமின் புதிய கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ, ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading