‘மண்டாடி’ படத்தின் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு? வெளியான புதிய தகவல்!

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், RS Infotainment தயாரிப்பில் உருவான ‘மண்டாடி’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. வெற்றிமாறன் பட்டறையில் பயிற்சி பெற்ற மதிமாறன் புகழேந்தியின் அறிமுகப் படமான இதில் சூரி கதாநாயகனாகவும், தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர். தனது முதல் தமிழ் படத்திலேயே சுஹாஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாகவும், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவான இப்படம் வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, வெறும் 5 நாட்களில் உலகளவில் ரூ.65 கோடி வசூலை ‘மண்டாடி’ குவித்துள்ளது. இதனால் ரூ.100 கோடி வசூல் இலக்கை படம் விரைவில் எட்டும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

இதற்கிடையில், படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் சம்பளம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. சூரி ரூ.20 கோடியும், சுஹாஸ் ரூ.3 கோடியும், சத்யராஜ் ரூ.2 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகியாக நடித்த மஹிமா நம்பியாருக்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. ‘மண்டாடி’ திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு பட்ஜெட் ரூ.75 கோடி என்றும் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading