மலையாள சினிமாவில் முதல் முறையாக ரூ.300 கோடி வசூலை கடந்த ‘லோகா’ திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது மற்றொரு மலையாள படமும் இந்த சாதனையை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தை கிரிஷ் எ.டி. இயக்கியுள்ளார். நிவின் பாலி, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், தற்போது உலகளவில் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Add a Comment
