நடிகர் சிவராஜ்குமார் தனது புதிய பட நிகழ்ச்சியில் பேசியபோது, இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தி தனது இரண்டாவது மொழி என்றும், அது எளிதான மொழி என்றும், இந்தியாவின் தேசிய மொழி என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு கர்நாடகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தி மொழியை தேசிய மொழி என தவறாகப் புரிந்துக்கொண்டு குழம்பி விட்டேன் அதனால் எனது கருத்துக்காக மன்னிப்பு கோருகிறேன் என்று தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
Add a Comment
