பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவாகும் ‘பத்தா’!

தமிழில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ படங்களின் மூலம் மக்களிடம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பாலாஜி தரணிதரனுடன் மீண்டும் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த திரைப்பட ‘பத்தா’. இவர்களது கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாக இது அமைந்துள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்க, சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

இயக்குநர் அட்லீயின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 – சினி1 ஸ்டுடியோஸ்’ இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன. விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் மீண்டும் இணைந்திருப்பது, அட்லீ தயாரிப்பில் உருவாவது மற்றும் சாய் அபயங்கர் இசையமைப்பது என பல்வேறு அம்சங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இந்நிலையில், படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாக படத்தின் தலைப்பு ‘பத்தா’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், திரைப்படத்தை அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘பத்தா’ படத்தின் முதல் பாடலான ‘மகளே’ வரும் 9-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading