அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது ‘ராக்கா’. சயின்ஸ் பிக்ஷன், பேன்டஸி மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் இணைந்த இப்படத்தில் தீபிகா படுகோன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், படக்குழுவில் மற்றொரு பிரபல நடிகர் இணைந்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. நடிகர் பிரித்விராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹிந்தியில் விரைவில் வெளியாகவுள்ள ‘தாய்ரா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இந்த தகவலை அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட காலமாக தனது விருப்பமாக இருந்ததாக கூறிய பிரித்விராஜ், அவருடன் ஒரே படத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தெலுங்கில் பிரித்விராஜுக்கு இது முதல் பெரிய கூட்டணி அல்ல. 2023-ம் ஆண்டு வெளியான ‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்து வரும் நிலையில், அல்லு அர்ஜூனின் ‘ராக்கா’ படத்திலும் அவர் இணைந்திருப்பது தெலுங்கு திரையுலகில் அவரது வரவேற்பை மேலும் உயர்த்தியுள்ளது.
—
