ரூ.250 கோடிக்கு மேல் வசூலை குவித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – மலையாள சினிமாவில் சாதனை!

ரிலீஸான சில நாட்களிலேயே வசூலில் வேகமெடுத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது ரூ.250 கோடி என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிஷ் எ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்த இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரைக்கு வந்தது.

வெளியான ஆறாவது நாளிலேயே ரூ.100 கோடியை கடந்த இப்படம், பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதன் மூலம் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்த நிலையில், தற்போது உலகளவில் ரூ.250 கோடியை தாண்டியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கேரளாவில் மட்டும் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு சந்தையில் ரூ.120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம், கேரளாவுக்கு வெளியே உள்ள இந்திய மாநிலங்களில் சுமார் ரூ.20 கோடியை ஈட்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2026-ம் ஆண்டில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இப்படம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக ரூ.200 கோடியையும், அதன்பிறகு ரூ.250 கோடியையும் குறுகிய காலத்தில் கடந்தது படத்தின் வசூல் வேகத்தை வெளிப்படுத்துகிறது. மலையாள சினிமாவின் அதிக வசூல் படங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், தற்போது இப்படம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 2025-ல் வெளியான ‘லோகா’ ரூ.300 கோடியுடன் முதலிடத்திலும், அதே ஆண்டின் ‘எல் 2 எம்புரான்’ ரூ.260 கோடியுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading