கேப்டன் சினி கிரியேஷன்ஸின் 10-வது படப்பிடிப்பு தொடக்கம் – ஹீரோவாக களமிறங்கும் சண்முக பாண்டியன்!

விஜயகாந்த் தொடங்கிய கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை வழங்கிய இந்த நிறுவனம், தனது 10-வது படைப்பை சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான மணி சேயோன், இந்த படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்பு தொடக்க விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இதையடுத்து பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் அடித்து படத்தின் படப்பிடிப்புக்கு தொடக்கப்புள்ளி வைத்தார். விழாவில் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ், இளவரசு, தம்பி ராமையா, படூர் ரமேஷ், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, பிரகதி, காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பூஜை நிகழ்வை தொடர்ந்து ‘புரொடக்சன் நம்பர் 10’ படத்தின் படப்பிடிப்பு இன்றே தொடங்கியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading