பாலகிருஷ்ணாவின் நடிப்பில் உருவாகும் ‘டாடா’ வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாலகிருஷ்ணாவின் 111-வது திரைப்படத்திற்கு ‘டாடா’ என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோபிசந்த் மலினேனி இயக்கும் இப்படம் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வர உள்ளது. ரித்தி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத்குமார், அபிமன்யு சிங், சுவாசிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோவில், இப்படம் குறித்த சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம் இருவரது கூட்டணி மீண்டும் உருவாகியிருப்பது ரசிகர்களிடம் கவனம் பெற்றது. பாலகிருஷ்ணா – நயன்தாரா ஜோடி ஏற்கனவே ‘ஸ்ரீராமராஜ்யம்’, ‘சிம்ஹா’, ‘ஜெய்சிம்ஹா’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளது. தற்போது இந்த கூட்டணி மற்றொரு படத்திற்காக ஒன்று சேர்ந்திருப்பது தெலுங்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர்களுக்கு இணையாக தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பாலகிருஷ்ணாவுக்கு ஆக்ஷன் படங்கள் தனி அடையாளமாக இருந்து வருகின்றன. மறைந்த நடிகரும் முன்னாள் முதல்வருமான என்.டி. ராமராவின் மகனான இவர், அரசியலிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான ‘அகண்டா 2’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ‘டாடா’ படம் மீதான எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading