‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர் வெளியீடு… அஜித் குறித்து நெகிழ்ந்த இயக்குனர் ஏ.எல்.விஜய்!

திரையுலகில் மட்டுமின்றி மோட்டார் ஸ்போர்ட்ஸிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ‘அஜித்தின் இந்த ரேசிங் பயணத்தை பதிவு செய்யும் வகையில் ‘கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட சில திரையரங்குகளில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

வெறும் பந்தயக் காட்சிகளை மட்டும் தொகுத்துக் காட்டாமல், போட்டிக்கு பின்னால் இருக்கும் அழுத்தம், சவால்கள், உணர்வுகள் மற்றும் அஜித்தின் அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளதாக இயக்குநர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். குறிப்பாக, எந்தவிதமான புனைவும் இல்லாமல் கார் பந்தய களத்தில் நடந்த சம்பவங்களை அப்படியே படமாக்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஏ.எல். விஜய் அளித்த பேட்டியில், இந்த ஆவணப்படம் அஜித்தின் நீண்ட நாள் கனவுத் திட்டம் என்றும், அவரே தன்னை அழைத்து தனது ரேசிங் அனுபவத்தை படமாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் முன்னிலையில் திரையரங்கில் டிரெய்லரை வெளியிட்டு அவர்களுடன் இணைந்து பார்த்த அனுபவமும் தனக்கு புதிதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரேசிங் களத்தில் அஜித் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும், அவர் ஒரு ‘ரியல் ஹீரோ’ என்பதை தனது செயல்பாடுகள் மூலம் நிரூபித்துவிட்டதாகவும் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியைப் போலவே, ஆவணப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த அனுபவம் முழுமையாக கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading