பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் பிரியங்கா மோகன்? #AGS29

ஜெய் – பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படத்தின் படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் 29-வது படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். எம். எஸ். ஆனந்தன் இயக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் யோகி பாபு, நாசர், ராஜீவ் மேனன், ஜி.எம். சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

படத்தின் அறிவிப்பு போஸ்டரே கதைக்களம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரியங்கா மோகனின் நிழல் தோற்றத்துடன் ரத்தக்கறை, துப்பாக்கி, கூர்மையான ஆயுதம் மற்றும் டைப் ரைட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனால் கிரைம் திரில்லர் பாணியில் படம் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த படத்தில் பிரியங்கா மோகன் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான கதாபாத்திர விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளன. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.’டாக்டர்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான பிரியங்கா மோகன், தற்போது மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவுடன் உருவாகும் ‘அரசன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading