டிசம்பர் 25ல் வெளியாகும் புதிய ‘ஹாரி பாட்டர்’ தொடரின் முதல் சீசன்!

வார்னர் பிரதர்ஸ் மற்றும் ஹேடே பிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய ‘ஹாரி பாட்டர்’ தொடரின் முதல் சீசன், ‘Harry Potter and the Sorcerer’s Stone’ கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்தத் தொடர் வரும் டிசம்பர் 25, 2026 அன்று கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தொடரின் டீசர் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய நடிகர்கள் மற்றும் புதிய காட்சியமைப்புகளுடன் ‘ஹாரி பாட்டர்’ உலகம் மீண்டும் திரைக்கு வரவிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply