ஹிந்தி தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 20வது சீசன் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கானின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சீசனுக்காக சல்மான் கான் சுமார் ரூ.150 கோடி சம்பளமாக பெறவுள்ளதாக கூறப்படுகிறது. 2010ஆம் ஆண்டு முதல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவருக்கு, 4வது சீசனில் ஒரு எபிசோடுக்கு சுமார் ரூ.2 கோடி வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
