விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையடுத்து சென்னையில் படக்குழு சார்பில் 50வது நாள் வெற்றி விழா நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், சட்டமன்றத்திலும் கட்டா குஸ்தி நடக்கிறது. அது மக்களின் நலனுக்காக உழைக்க நடைபெறும் ஆரோக்கியமான போட்டி என குறிப்பிட்டார். மேலும், இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடுவது மிகப்பெரிய சாதனை என்றும், ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவுக்கு இது மிகப்பெரிய வெற்றி என்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
Add a Comment
