‘சர்தார் 2’ – யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘சர்தார்’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் கார்த்தி அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

இரண்டாம் பாகத்திலும் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, சென்னையில் உள்ள நந்தனம் டிரேட் சென்டரில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து வெளியான டிரெய்லர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், ‘சர்தார் 2’ படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகும் படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading