தந்தைக்கு எதிராகவே நீதிமன்றத்தில் வாதாடும் யோகலட்சுமி – இன்று முதல் ‘தி கோர்ட்’ தொடர் !

‘ஹார்ட் பீட்’ தொடரின் முதல் இரண்டு சீசன்களில் தேஜு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் யோகலட்சுமி. துணிச்சலான கதாபாத்திரத்தை தனக்கே உரிய நடிப்பால் வெளிப்படுத்திய அவர், அதன் பின்னர் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திலும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது சிலம்பரசனின் ‘அரசன்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில், யோகலட்சுமி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய வெப் சீரிஸ் ‘தி கோர்ட்’. ஜெயபிரகாஷ், சஞ்சனா திவாரி, அர்ஜுன் ஷியாம், விவேக் பிரசன்னா, விஜே கல்யாணி உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். திக்குவாய் குறைபாடு இருந்தாலும் திறமையான வழக்கறிஞராக இருக்கும் பெண், நீதிக்காக எதிர்கொள்ளும் போராட்டங்களே தொடரின் மையக்கதை.

கதையில் எதிர்பாராத திருப்பமாக, யோகலட்சுமி ஏற்று நடித்துள்ள வழக்கறிஞர் தனது சொந்த தந்தைக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாட வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் தந்தை – மகள் இடையிலான சட்டப் போராட்டமும், அவர்களுக்குள் இருக்கும் உணர்வுப்பூர்வமான முரண்பாடுகளும் தொடரில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஜியோ ஹாட்ஸ்டாரில் இன்று செப்டம்பர் 4 முதல் ‘தி கோர்ட்’ வெளியாகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான்கு எபிசோடுகள் வீதம் புதிய அத்தியாயங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading