பான் இந்தியா அளவில் முன்னணி நடிகைகள் – டாப் 5 இடங்களில் யார் யார்?

இந்திய சினிமாவில் பல மொழிகளில் திரைப்படங்கள் உருவாகி வந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய திரையுலகங்கள் பான் இந்தியா அளவில் அதிக கவனத்தைப் பெறுகின்றன. அந்த வகையில், இந்த ஐந்து மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணி இடங்களை பிடித்துள்ளவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். ‘காக்டெயில் 2’ படத்திற்குப் பிறகு அவரது மார்க்கெட் மேலும் உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த ராஷ்மிகா தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கர்ப்ப காலத்தில் புதிய படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருந்தது அவரது தரவரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.மூன்றாவது இடத்தில் ஷ்ரத்தா கபூரும், நான்காவது இடத்தில் சாய் பல்லவியும், ஐந்தாவது இடத்தில் ஆலியா பட்டும் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவி பான் இந்தியா அளவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்திருப்பது கவனிக்கத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading