‘ராஜன் வகையறா’ அப்டேட் – வைரலாகும் புகைப்படம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘ராஜன் வகையறா’ படத்தில் நடிகர் கென் கருணாஸ் இணைந்துள்ளார். ‘வடசென்னை’ படத்தில் அமீர் நடித்த கதாபாத்திரத்தின் இளமைக்காலத்தை மையமாகக் கொண்ட பகுதிகளில் கென் கருணாஸ் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

வெற்றிமாறன் தற்போது சிலம்பரசனை வைத்து ‘அரசன்’ படத்தை இயக்கி வருகிறார். அதன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இதற்கிடையில் ‘ராஜன் வகையறா’ படத்தையும் அவர் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.வடசென்னையை மையமாகக் கொண்ட ‘ராஜன் வகையறா’ உருவாகிறது.

இயக்குநர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு, கென் கருணாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ராஜன் வகையறா’ படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்ததன் மூலம் அறிமுகமான கென், பின்னர் ‘யூத்’ படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார். தற்போது மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading