திரையரங்குகளில் வெளியான ஜிவி.பிரகாஷின் ‘இம்மோர்டல்’ திரைப்படம்!

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது பல்வேறு சுவாரஸ்யமான படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வரிசையில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘இம்மோர்டல்’. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கும் இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். ஏகே பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘இம்மோர்டல்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஒரே வீட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஹாரர் திரில்லர் காட்சிகள் படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தின. ரொமான்ஸ், திரில்லர் மற்றும் பேன்டஸி அம்சங்களுடன் உருவாகியுள்ளது . இந்த நிலையில், ‘இம்மோர்டல்’ திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading