இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதைவிட சினிமாவை விட்டு விலகிவிடலாம் – மனம் திறந்த‌ நடிகை டாப்ஸி!

தமிழ் ரசிகர்களிடம் ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமானவர் டாப்ஸி. தற்போது பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் நடித்துள்ள ‘காந்தாரி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் டாப்ஸி பங்கேற்று வருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய டாப்ஸி, சமீப காலமாக வெளியாகும் சில படங்களின் போக்கு தனக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதிகப்படியான வன்முறை மற்றும் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்சிகளை வைத்து திரைப்படங்கள் உருவாவது தற்போது ஒரு டிரெண்டாக மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“அந்த மாதிரியான படங்களுக்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால், எனக்கு அப்படிப்பட்ட படங்களில் நடிக்க விருப்பமில்லை. சில திரைப்படங்களை பார்க்கும்போது, இதுபோன்ற படங்களில் நடிப்பதைவிட சினிமாவை விட்டு ஓய்வு பெற்றுவிடலாம் என்ற எண்ணம் வருகிறது” என டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது குடும்பத்தினரிடமே, “நான் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதா?” என்று கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பிடிக்காத வகையிலான திரைப்படங்களில் நடிப்பதற்கு பதிலாக, தேவைப்பட்டால் சினிமாவிலிருந்து முழுமையாக விலகிவிடலாம் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக டாப்ஸி வெளிப்படையாக கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading