ஹிந்தியில் கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் வெளியான பக்தி திரைப்படம் ‘ஹனுமான் அன்ஸ்’. ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு கிடைக்காத நிலையில், பின்னர் ரசிகர்களின் மவுத் டாக் மூலம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து, தற்போது ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. நீம் கரோலி பாபாவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தை விஷால் சதுர்வேதி இயக்கியுள்ளார். படப்பிடிப்பின்போது தளத்தில் சைவ உணவு மட்டுமே அனுமதிக்கப்பட்டதுடன், படக்குழுவினர் தினமும் ‘ஹனுமான் சாலிசா’ பாராயணம் செய்துள்ளனர். மேலும், வெளியீட்டுக்கு முந்தைய சுமார் ஐந்து மாதங்கள் இயக்குநர் பழங்களை மட்டுமே உண்டு விரதம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
Add a Comment
