அக்டோபர் 15-ல் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் – மீண்டும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த படக்குழு !

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2023-ல் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்ணா, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், உலகளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்பட்டது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணி இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற சில முக்கிய கதாபாத்திரங்களும் தொடர்ச்சியிலும் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் மீண்டும் கேமியோ கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘அல்ல போலேலோ’ பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்யும் வகையில் புதிய போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளதுடன், போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading