உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் ராதிகா நடித்துள்ள ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

இந்திய வருவாய்ப் பணியைச் சேர்ந்த அதிகாரியான தோ. சமயமுரளி எழுதி, இயக்கி, பின்னணி இசையமைத்துள்ள திரைப்படம் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’. இதில் ராதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஜே.டி. சக்ரவர்த்தி, லால், சரண் சக்தி, பாலசரவணன், ஸ்மேஹா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராம் பிரகாஷ் தயாரித்துள்ள இப்படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.

படத்தின் பின்னணி குறித்து இயக்குநர் தோ. சமயமுரளி கூறுகையில், 2008-ம் ஆண்டு இந்திய வருவாய்ப் பணியில் சேர்ந்த பிறகு, சுங்கத்துறை அமலாக்கம் மற்றும் மறைமுக வரிவிதிப்புப் பிரிவுகளில் பணியாற்றியதாகத் தெரிவித்தார். அப்போது தான் விசாரித்த சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.

கடத்தல், நிழல் உலகம், சுங்கத்துறையின் செயல்பாடுகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பில் சுங்கத்துறை வகிக்கும் முக்கியப் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இப்படத்தின் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.மூத்த ஐஆர்எஸ் அதிகாரியான தோ. சமயமுரளி, ‘சுங்கம்: தி ஹெரிடேஜ் ஆஃப் சென்னை கஸ்டம்ஸ்’, ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’, ‘காக்கி’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். அவர் இயக்கிய முதல் குறும்படமான ‘புதிய பார்வை’, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading