பிரபாஸ் பிறந்தநாளில் ‘சலார் 2’ அப்டேட்!

‘கேஜிஎப்’ படங்கள் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் நீல், தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சலார்’ படத்தை இயக்கினார். 2023-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதன் இரண்டாம் பாகமான ‘சலார் – சவுர்யாங்க பர்வம்’ படப்பிடிப்பு 2024-ம் ஆண்டு தொடங்கியது. இப்படம் 2026-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் அடுத்தகட்ட அப்டேட்கள் வெளியாகாமல் இருந்தன.

இந்நிலையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சலார்’ படத்தைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் வாழ்த்து தெரிவித்து, இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. அந்தப் பதிவில், இந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தி என்றும், பாக்ஸ் ஆபீஸின் ‘சலார்’ என்றும் பிரபாஸைப் புகழ்ந்து வாழ்த்திய தயாரிப்பு நிறுவனம், ‘டைனோசர்’ மீண்டும் களமிறங்கி அதிரடி காட்டுவதைக் காண ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல், அதன் பணிகளை முடித்த பிறகு ‘சலார் 2’ படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading