புதிய படத்தில் ருக்மணி வசந்த்… வெளியான அறிவிப்பு!

‘டாக்சிக்’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘டிராகன்’ படத்தில் ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிக்கும் மற்றொரு புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் இப்படத்தில் தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படக்குழு வெளியிட்டுள்ள காணொளியில், ருக்மணி வசந்த் ‘தாரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது கதாபாத்திரம் நகைச்சுவையான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading