ஜீவாவின் ‘தகப்பன்’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘கிடா’ படத்தை இயக்கிய ரா. வெங்கட் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அப்பா – மகன் இடையேயான ஆழமான பாசத்தையும் உறவையும் பேசும் குடும்பக் கதையாக அமைந்துள்ளது. ஜீவாவுடன் ரஜிஷா விஜயன், லட்சுமி ராமகிருஷ்ணன், குழந்தை நட்சத்திரம் கேசவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் முழுப் படப்பிடிப்பும் 40 நாட்களில் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை நடிகர் ஜீவாவும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading