செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோவில் தனது உருவம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக நடிகை ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தொழில்நுட்பம் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுவதை பார்ப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். குறிப்பாக பெண்களை குறிவைத்து போலியான மற்றும் ஆபாசமான வீடியோக்களை ஏஐ மூலம் உருவாக்கி பரப்புவது அதிகரித்து வருவது கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது அல்லது மற்றவர்களுடன் பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடாமல், அவற்றை சமூக வலைதளங்களில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்றும் ஷாலினி பாண்டே வலியுறுத்தியுள்ளார்.
Add a Comment
