செப்டம்பர் 18ல் வெளியாகும் ‘தி டார்க் ஹெவன்’! சஸ்பென்ஸ், கிரைம், ஹாரர் கலந்த படம்

கொலை ஒன்றைச் சுற்றி நடைபெறும் துப்பறியும் விசாரணையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. ‘டி3’ படத்தை இயக்கிய பாலாஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷிகா, ரித்விகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் இப்படத்தின் கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். முழுநீள சஸ்பென்ஸ், கிரைம் மற்றும் ஹாரர் த்ரில்லர் கலவையில் படம் உருவாகியுள்ளது. த்ரில்லர் கதையாக இருந்தாலும், எந்தவிதமான வெட்டுகளும் இல்லாமல் சென்சார் சான்றிதழ் பெற்றிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு கொலை எப்படி நிகழ்கிறது, அதன் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகளை துப்பறியும் விசாரணை மூலம் எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள் என்பதே திரைக்கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

முன்னதாக ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஜூலை 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான படங்கள் வெளியான காரணத்தால் ரிலீஸ் தேதி பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது புதிய வெளியீட்டு தேதியாக செப்டம்பர் 18 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஸ்பென்ஸ் மற்றும் கிரைம் பின்னணியிலான இந்தப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading