அக்‌ஷய் கண்ணா, நடிப்பில் ‘மகாகாளி’… வெளியான ரிலீஸ் தேதி!

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸ் பாணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘மகாகாளி’. ‘ஹனு மேன்’ படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மாவின் ஆக்கத்தில் தயாராகும் இப்படத்தை பூஜா அபர்ணா கொல்லூரு இயக்குகிறார். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அசுரர்களின் வலிமைமிக்க குருவாக கருதப்படும் சுக்ராச்சாரியார் தலைமையில் தொடங்கும் போர், உலகத்தின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய மிகப்பெரிய அழிவுக்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்குகிறது. இந்த ஆபத்தை மகாகாளி எவ்வாறு எதிர்கொண்டு தடுக்கிறார் என்பதே படத்தின் முக்கிய கதைக்களமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் கண்ணா இதுவரை பார்க்காத வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். மகாகாளியாக ஸ்ரேயா ரெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பூமி ஷெட்டி, ரோஹித் ஷரப், குஷ்பு, சமுத்திரக்கனி, முரளி சர்மா, நாசர், பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதனிடையே, ‘மகாகாளி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி இப்படம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது. ஒவ்வொரு மொழிக்குமான வெளியீட்டு அறிவிப்பு வீடியோக்களையும் படக்குழு தனித்தனியாக வெளியிட்டுள்ளது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading