கால்பந்து ரசிகர்களின் கதையாக வரும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’… செப்டம்பர் 4-ல் ரிலீஸ்!

கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து மலையாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’. நிகில் பிரேம்ராஜ் இயக்கிய இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், பாலு வர்கீஸ், சாய்ஜு குருப் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர் ஐ.எம். விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்த இந்தப் படம், ஒரு கிராமத்து மக்களின் கால்பந்து மீதான ஆர்வத்தையும் அதனைச் சுற்றியுள்ள உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவானது.

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் தற்போது ‘7 ஸ்டார் பாய்ஸ்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. பீனிக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி. அசோக் இப்படத்தை தமிழில் வெளியிடுகிறார். ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் டி. அசோக் கூறுகையில், “‘7 ஸ்டார் பாய்ஸ்’ கால்பந்தை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம். இதில் கால்பந்து விளையாட வேண்டும் என்ற தீராத ஆர்வத்துடன் இருக்கும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் திறமையாக விளையாடும் ஆண்டனி வர்கீஸை தங்களுடைய ரோல் மாடலாக கருதுகிறார்கள். அந்த சிறுவர்களின் கால்பந்து ஆர்வத்தையும், அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது” என்றார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading