கார்த்திக் சுப்பராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அடுத்தடுத்த அப்டேட்களையும் படக்குழு வெளியிட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் ‘டோரதி’ படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். வெளியான சில மணி நேரங்களிலேயே டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இந்நிலையில், தற்போது படத்தின் இசை தொடர்பான முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், ‘டோரதி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘கல்யாண விருந்து’ வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடலை அந்தோணி தாசன், யுகேந்திரன் மற்றும் பிரியா ஜெர்சன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. திட்டமிட்டபடி ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
—
