‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப், அடுத்ததாக விஜய் வர்மாவை கதாநாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்குகிறார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான விஜய் வர்மா நடிக்கும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு நடிக்கிறார். விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுலும், ஏவியட் பிக்சர்ஸ் சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசனும் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். வித்தியாசமான களத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் விஜய் வர்மாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். அதேபோல், ரோமியோ பிக்சர்ஸ் ராகுலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி, அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர்.
டார்க் ஹியூமர் பின்னணியில் திரில்லர் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாடல்களுக்கு யுகபாரதி வரிகளை எழுதுகிறார். மேலும், ‘டிசி’ திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
—
