ஸ்டாண்ட்-அப் காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பிட்னஸ் நிபுணர் ஆரத்தி கிருஷ்ணா இணைந்து நடிக்கும் புதிய தமிழ் ரொமான்டிக் திரைப்படம் ‘லைட் வெயிட் பேபி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை கே.சி. குரு எழுதி இயக்கியுள்ளார்.
ஹிதா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு மற்றும் மைசூரில் நடைபெற்றுள்ளது. மொத்தம் நான்கு கட்டங்களாக திட்டமிடப்பட்ட படப்பிடிப்பு வெறும் 45 நாட்களில் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிட்னஸ் துறையை மையமாகக் கொண்டிருந்தாலும், அந்த உலகத்தை மட்டுமே கதைக்களமாகக் கொள்ளாமல், முற்றிலும் மாறுபட்ட பின்னணியில் இருந்து வரும் இருவரின் உறவை மையப்படுத்தி படம் நகர்கிறது. காதல் மற்றும் நகைச்சுவையுடன் குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட ஆசைகள் ஆகியவற்றையும் இணைத்து இப்படம் உருவாகியுள்ளது.
—
