இந்திய சினிமாவின் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு காலமானார். தற்போது அவரது வாழ்க்கையை பதிவு செய்யும் புதிய சுயசரிதை புத்தகத்தின் அட்டையை நடிகை பிரியங்கா சோப்ரா அறிமுகப்படுத்தியுள்ளார். ‘Empress Sridevi: The Definitive Biography of Sridevi’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை தீரஜ் யூ. குமார் எழுதியுள்ளார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை, திரைப்பயணம் மற்றும் இந்திய சினிமாவில் அவர் உருவாக்கிய தனித்துவமான இடம் குறித்து இந்த நூல் விரிவாக பதிவு செய்ய உள்ளது.
Add a Comment
