விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் “சிக்மா” திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “அய்யய்யோ அம்மாடி” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இசையை தமன் அமைத்துள்ளார். முன்னதாக வெளியான “சிக்மா ஸ்டைல்” பாடல் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விவேக் எழுதிய இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் முதலில் ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
