இயக்குநர் இளன் கதாநாயகனாக நடித்துள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் டீஸர் வெளியீடு!

இயக்குநர் இளன், ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தற்போது அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படமான ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சான்வி மேக்னா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், இளங்கோ குமரவேல், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘அட்ராசிட்டி’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, இன்று படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது.வெளியான டிரைலர் முழுக்க நகைச்சுவை கலந்த குடும்ப பின்னணியில் நகர்கிறது. திருமணத்திற்குப் பிறகு மனைவியின் வீட்டிலேயே வாழ வேண்டிய சூழ்நிலையில் சிக்கும் நாயகன், மாமியார் மற்றும் மாமனாருடன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் சங்கடங்களை கலகலப்பாக காட்டியுள்ளனர். குடும்ப வாழ்க்கையை காமெடி பாணியில் அணுகியிருப்பது டிரைலரில் தெளிவாக தெரிகிறது.

திரையரங்குகளைத் தவிர்த்து, ‘பியார் பிரேமா கல்யாணம்’ நேரடியாக Netflix ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. டிரைலர் வெளியானதையடுத்து, ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading