தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘குட்டி புலி’ மூலம் இயக்குநராக அறிமுகமான முத்தையா, பின்னர் ‘கொம்பன்’, ‘மருது’ , விருமன் உள்ளிட்ட கிராமத்து பின்னணியிலான வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் அவர் இயக்கிய “ராம்போ” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்போது அவர் அருண் விஜய் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு “இருளன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஷண்முக பாண்டியன் மற்றும் நேதாஜி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகின்றன. படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக மிர்னா நடித்துள்ள நிலையில், சமுத்திரக்கனி மற்றும் ஜான் கொக்கேன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இந்த போஸ்டரில் “இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு” என்ற வரி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் படம் வலுவான கிராமத்து மற்றும் வரலாற்று பின்னணியுடன் உருவாகி வருவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
