படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சூடு பிடித்த “டேர் டெவில்” பட பிசினஸ்?

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு “டேர் டெவில்” என பெயரிடப்பட்டுள்ளது. கார் பந்தயங்களில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வரும் அஜித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முழு நேர சினிமா பணிகளுக்கு திரும்பவுள்ளார்.

பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே சமூக வலைதளங்களில் படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், படத்தைச் சுற்றி தற்போது புதிய தகவல் ஒன்று பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாடு திரையரங்க உரிமை, ஓ.டி.டி. உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை சேர்த்து சுமார் ரூ.180 கோடி வரை முதல்கட்ட வியாபாரம் முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் வியாபாரம் பேசப்படுவது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாதபோதிலும், அஜித்-ஆதிக் கூட்டணியின் மார்க்கெட் மதிப்பும், ‘குட் பேட் அக்லி’ வெற்றியும் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading