பிளாக் காமெடி, பேன்டஸி கலந்த “மாஸ்டர் பிளான்” திரைப்படம்!

தருண் விஜய் மற்றும் அக்ஷரா ரெட்டி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் “மாஸ்டர் பிளான்”. செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே.எஸ். பழனி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஜே. அலி மிர்சாக் இசையமைக்கிறார். உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடுத்தர குடும்பத்தை மையமாகக் கொண்ட இந்த படம், அவர்கள் தங்கள் தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ முயற்சிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதிலிருந்து மீளும் பயணத்தை நகைச்சுவையுடன் சொல்லப்போகிறது.

படக்குழுவின் தகவலின்படி, “மாஸ்டர் பிளான்” பிளாக் காமெடி, பேன்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த வித்தியாசமான முயற்சியாக உருவாகி வருகிறது. குடும்ப உறவுகள், ஆசைகள் மற்றும் எதிர்பாராத பிரச்சினைகளை நகைச்சுவை கலந்த பாணியில் கையாளவுள்ளதாக கூறப்படுகிறது.முதல் போஸ்டரிலிருந்தே வித்தியாசமான டோன் தெரிகிறது என்பதால், இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்கு ரசிகர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading