புதுமணத் தம்பதிகளின் காதல்-காமெடி கலாட்டா… “மொத ராத்திரி” முதல் பாடல் வெளியீடு!

நடிகர் ரிஷிகாந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் “மொத ராத்திரி” திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் அனிஷ்மா அனில்குமார் இணைந்து நடித்துள்ளார்.

புதிதாக திருமணமான ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. மைத்ரி தமிழில் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படமாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான “டை டக்கா” இன்று வெளியிடப்பட்டது. புகபாரதி எழுதிய இந்தப் பாடலை பரத் ஷங்கரே பாடியுள்ளார். பாடலின் துள்ளலான இசையும், புதுமண ஜோடியின் உற்சாகமான காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. “மொத ராத்திரி” திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading