90களில் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக விளங்கிய மோகினி, நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் . குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து சினிமாவிலிருந்து விலகியிருந்த அவர், தற்போது மலையாளத்தில் உருவாகும் “கலிபா” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
(1991) “ஈரமான ரோஜாவே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மோகினி, பின்னர் கார்த்திக், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார். அவர், கடைசியாக 2011-ல் சுரேஷ்கோபி நடித்த “கலெக்டர்” படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
தற்போது சுமார் 15 வருடங்களுக்கு பிறகு வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள “கலிபா” படத்தில் நூர்ஜகான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளதே.
