“மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்” – ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் – இயக்குனர் நவீன் ஹிதயத் உறுதி!

2013-ம் ஆண்டு வெளியான “மூடர் கூடம்” திரைப்படம் அதன் வித்தியாசமான நகைச்சுவை மற்றும் விநோதமான கதாபாத்திரங்களால் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பெற்றது. அந்தப் படத்தின் நீண்டநாள் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத், இந்தப் படத்தையும் எழுதி, இயக்கி, நடித்துள்ளார். அவருடன் ஓவியா, சென்ராயன், ராஜாஜி, குபேரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை நடராஜன் சங்கரன் கவனித்துள்ளார். தற்போது “மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்” திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

படம் குறித்து பேசிய நவீன் ஹிதயத், “மூடர் கூடம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். பல ஆண்டுகளாக இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். அவர்களை ஆச்சரியப்படுத்தும் கதையைத் தேடிக்கொண்டிருந்தேன்; அந்தக் கதையாகவே ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ அமைந்தது” என்றார். மேலும், “ரசிகர்கள் விரும்பிய நகைச்சுவையை அப்படியே வைத்துக்கொண்டு, கதாபாத்திரங்களையும் கதை சொல்லலையும் இன்னும் பெரிய அளவுக்கு கொண்டு சென்றுள்ளோம்” என்றும் தெரிவித்தார். கிராண்டல் பிக்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா தயாரிக்கும் இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply