ரவி மோகனின் ‘ப்ரோ கோட்’ திரைப்படத்திற்கு தற்போது புதிய தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரோ கோட் படத்தின் தலைப்பு ‘ப்ரோ க்ளப்’ என்று மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தான் நடித்து வரும் படங்கள் குறித்து சமீபத்தில் பேசிய அவர், ‘ஜீனி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், ‘கராத்தே பாபு’ படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டும் எடுக்கப்பட வேண்டியிருப்பதாகவும் கூறினார். அதேபோல் ப்ரோ கோட் பட தலைப்பால், தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவே தலைப்பு மாற்றம் செய்யப்பட்டதாக விளக்கமளித்தார்.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரவி மோகனே தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். முன்னதாக ‘ப்ரோ கோட்’ என்ற பெயருக்கு எதிராக டெல்லியைச் சேர்ந்த மதுபான நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சமரச பேச்சுவார்த்தை நடந்தபோதிலும் அது முழுமையாக நிறைவேறாததால், படக்குழு இறுதியில் புதிய தலைப்பைத் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
