‘புளுப்ளை’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா!

மிஸ் வேல்ட் பட்டத்தை வென்ற பிறகு 2002-ல் விஜய்யின் ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் இரண்டிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில், தனது அடுத்த ஹாலிவுட் திரைப்படத்தை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

‘புளுப்ளை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சயின்ஸ்-பிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்குநர் நிம்ரோட் ஆன்டல் இயக்குகிறார். திரைக்கதையை டேவிட் பிரிஜெரியோ, வில்லியம் யூபாங்க் மற்றும் கார்லைல் யூபாங்க் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இந்தப் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ரஸ்சல் குரோவுடன் பிரியங்கா சோப்ரா முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்.

காங்கோ காடுகளை பின்னணியாகக் கொண்ட இப்படம், மர்மமான முறையில் விழுந்து நொறுங்கிய ஒரு விமானத்தை மீட்கச் செல்லும் ரகசிய நடவடிக்கையை மையமாகக் கொண்டதாக உருவாகிறது. அந்த விமானத்தை மீட்கும் சிறப்புப் படை சந்திக்கும் எதிர்பாராத ஆபத்துகள் மற்றும் பரபரப்பான சம்பவங்களே கதையின் முக்கிய அம்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த புதிய பட அறிவிப்பை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதளத்தில் “Onto the next” என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் எஸ்.எஸ். ராஜமவுலியின் புதிய படத்தில் நடித்துவரும் அவர், அதே சமயம் ஹாலிவுட்டிலும் தொடர்ந்து முக்கிய வாய்ப்புகளைப் பெறுவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading